Monday, October 6, 2008

பெரியார் பிறந்த நாள் விழா காட்சிகள்

பெரியார் பிறந்த நாள் விழா காட்சிகள்Monday, August 18, 2008

வருகிறது அபாயம் !வருகிறது அபாயம் ! எதிர்கொள்eத்தயாரா?

அன்பான உழைக்கும் தமிழ் மக்க¼e! எந்த காலத்திலும் இல்லாத அeவிற்கு இப்போது பார்ப்பன பனியா கூட்டங்கள் நமது நாட்டுக்கு புதிய பொருளாதாரம் என்னும் பெயரில் சந்தையை திறந்து உள்eனர். கடந்த 10 ஆண்டுகளாகவே பெரியாரிய மற்றும் (மார்க்சிய லெனினிய) அறிஞர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வழக்கம் போல் அரசுகள் இரும்பு காதுகளாகவே உள்eன. அதன் விçeவு இன்று ரிலையன்ஸ் பிரஸ் என்னும் பனியா நிறுவனம் சில்லறை வியாபாத்தில் நுழைந்துள்eது.ஆம்! இனி காய்கறியும், மளிகை சாமானும், ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற ஏகபோக பன்னாட்டு நிறுவன கடைகளில்தான் வாங்கும் நிலை ஏற்படும். இதனால் சிறு விவசாயிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக வாழ்விழக்கும் நிலை ஏற்படும் ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட இந்திய சிறு தொழில்களின் எண்ணிக்கை 72000க்கும் மேல் என்று கணக்கிடப்படுகிறது. இப்போது வியாபாரிகçeயும் விவசாயிகçeயும் இந்தகணக்கில் சேர்க்கும் அவலம் நடந்துக் கொண்டிருக்கிறது.வால்மார்ட்டும், அம்பானியும், நேரடியாக கிராமங்களில் கொள்முதல் நிலையங்கçe ஆரம்பித்து காய்கனிகçe நேரடியாக விற்கப்போகிறார்கள். இனி காந்திசந்தையும், தரைக்கடையும் வியாபாரிகளும், தள்ளுவண்டி சிறுவியாபாரிகளும், சுமைதூக்கும் தொழிலாeர்களும் வாழ்விழக்கும் அபாயம் நேர்ந்துள்eது. அரசும் தெரிந்தே இதை அனுமதிக்கிறது. பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும், மற்றும் ஒடுக்கப்பட சிறுபான்மையோரம் தானே தவிர பார்ப்பானோ, மார்வாடியோ அல்ல.அப்படி பார்ப்பானோ, மார்வாடியோ பாதிக்கப்படுவர் என்றால் ரிலையன்சையும், வால்மார்ட்டையும் அனுமதிப்பார்களா?சிந்தியுங்கள் தமிழர்க¼e!இனியும் நான் சாதியாக் பிரிந்திருக்க வேண்டுமா?அல்லது தமிழர்களாய் ஒன்றுபட வேண்டுமா? இனியும் சாதியாய், மதமாய் பிரிந்து நமது கடைசி கோமணத்துணியையும் பறிக்கொடுப்பதற்கு முன் தமிழராய் ஒன்றியணைவோம்! பார்ப்பன பனியா பன்னாட்டு நிறுவனங்கçe விரட்டி அடிப்போம்!! நம் மண்ணையும், மக்கçeயும் காப்போம்.போனவன், வந்தவன் எல்லாம் கால் தூக்க நம் தேசம் என்ன தெருக்கல்லா?விவசாய, வியாபார, சுமைதூக்கும் தோழர்க¼e! சாதி மத அரசியல் சீர்கேடுகçe தட்டிக் கேட்க உலகமக்கçeப் போல் நம் மக்கçeயும் மானமும் அறிவும் உள்e சமுகமாய மாற்ற துணிவு கொண்ட இçeஞர்கçe பெரியார் தத்துவ மையம் இரு கரம் கூப்பி அழைக்கிறது.வாருங்கள் தோழர்க¼e ! புது உலகம் படைப்போம்.

இனம் என்பது வாழ்வு ‡ சாதி என்பது இழிவு

கூலி உயர்வுக்கோ, உத்தியோக பங்குக்கோ, நாட்டு சுதந்திரத்திற்கோ, பொது உடைமைக்கோ, அல்லது வேறு எந்தக் காரியத்துக்கு ஆகக் கூடியிருந்தாலும் சரி, நீங்கள் உங்கçeப் பற்றிய ஒரு உண்மையை மாத்திரம் மறந்து விடாதீர்கள்.
அதாவது நீங்கள் கீழ்ஜாதி என்றும், பஞ்சமர் (றீளீ & றீவீ) என்றும் இழி மக்கள் என்றும் ஹரிஜனங்கள் என்றும் இழிவாகக் கருதப்பட்டு அழைக்கப்பட்டு வருவது மாத்திரமல்லாமல், அந்தப்படி மதம், அரசியல் ஆதாரங்களும் அதாவது சாஸ்திரம் சமயம் முதலியவைகளில் ஸ்திரப்படுத்தியும் நடவடிக்கைகளில் இழிமக்களாக நீங்கள் பெரும்பாலோர் நடத்துப்பட்டு வருவதோடு அதன் பயனாக நீங்கள் மற்ற மக்கçeக் காட்டிலும் சமுதாயம் கல்வி, பொருளாதாரம், வாழ்வு முதலியவைகளில் கடையராய் கீழ்த்தரமுள்eவர்களாய் இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த இழிநிலை, கடை நிலை, தடை நிலை நீங்க, நீங்க வைக்க இன்று உங்கள் வசமோ, அல்லது வேறு உங்களுக்காகப் பாடுபடுகின்ற வேறு யார் வசமோ, எவ்வித சாதனமும் திட்டமும் முயற்சியும் இல்லை.
இன்று மாத்திரம் அல்லாமல் பஞ்சமன் (றீளீ & றீவீ) சண்டாeன் இழி மகன், கடையன் என்கின்ற மக்கள் பிறவியினால் என்று உண்டாக்கப்பட்டார்க¼ளா, அன்று முதல் உங்கள் இழிவு நீங்க வழி யாரிடமும் எந்தக் கடவுளிடமும் எந்த கடவுள் பக்தர், ஆழ்வார், நாயன்மார், மாகத்மாரி´ என்பவர்களிடம் எந்த அவதாரத்திற்கும் எந்த ஜனநாயக ஆட்சி ராமராஜ்ய சாம்ராஜ்யத்தினிடமும் இல்லை. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு இதற்குப் பரிகாரம் தேட கொள்கை, திட்டம் வகுங்கள்.
அதை விட்டுவிட்டு சர்க்காரிடம் உத்தியோகம், படிப்பு, கடமை, கூரை, குடிசை மிராசுதானிடம் 2 படி நெல் உயர்வு என்பதெல்லாதம் அதற்கு யாதொரு பலனும் அளிக்காது என்பததோடு உங்களுக்கு இந்த உத்தியோகம் முதல் கூலி வரை சம்பாதித்துக் கொடுக்கிறேன் என்கின்ற தரகர்களுக்கும் ஏதோ ஒன்று இரண்டு வாயாடி தந்திரக்காரர்கள் இரண்டு கோனை எழுத்தும், எழுதும் ஆங்கிலம் படித்தவனுக்கு உத்தியோக எலும்பும் அல்லாமல் வேறு பயன் ஏதும் விçeயப் போவதில்லை.
நீங்கள் ஏன் பஞ்சமன், எப்படிப் பஞ்சமன் என்பது தெரிந்தால் தான் நீங்கள் மனிதர்களாக வாழ. மற்ற மனிதர்களுக்கு நீங்கள் உரிமை கொடுக்கக் கூடியவர்களாக வாழ முடியும். அதில்லாமல். நீங்கள் 4‡வது ஜாதி, 5‡வது ஜாதி, மற்ற ஒருவர் முதலாவது ஜாதி, இரண்டாவது ஜாதி என்பது சட்டத்தில் சாஸ்திரத்தில் சாமிகளிடத்தில் இருக்கும் வரையில் பிச்சை கேட்கத்தான் முடியும்.
ஆகவே அந்த உண்மை உங்களுக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்களின் அனேகம் பேர் அதாவது 100‡க்கு 95 பேர்களுக்கு வீடு இல்லை. 100‡க்கு 99 பேர்களுக்கு உத்தியோகம் உடலுழைப்பும் இல்லாத கஷ்டமும் இழிவுமான வேலை இல்லாத வேலை இல்லை.
நீங்கள் அநேகர் வாழ்வுக்காக இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி இருக்கிறீர்கள். சாக்கடை தள்ளுவது, கக்கூஸ் எடுப்பது, பிணம் சுடுவது, சுடுகாடு காப்பது முதலிய ஈன வேகை என்பவைகçeயயல்லாம் செய்வதில் உள்e 100 பேரும் நீங்க¼e.
இந்தப்படி ஏன் இருக்க வேண்டும்? உங்கçeத் தவிர வேறு எந்த ஜாதியானவது அதாவது முதல் ஜாதி பிராமணனாவது அவனுக்கு அடுத்தவனாக இரண்டாவது ஜாதி சைவனாவது இந்த இழிவேலை செய்கிறானா? படிப்புக்குத் தொங்குகிறானோ? ஜீவனத்துக்குக் கக்கூஸ் எடுக்க மூட்டை தூக்க வேறு நாட்டுக்கு ஓடுகிறானா?
இந்த அடிப்படையினை அறிந்து அதற்கு மருந்து தேடாமல் தற்கால சாந்திக்குக் கூட பயன்படாத மந்திரி, செகரட்டரி உத்யோகம் படிப்பு, இரண்டு படி கூலி நெல் உயர்வு என்று திரிகிறீர்க¼e! இது அறிவுள்e காரியமாகுமா? மானமுள்e காரியமாகுமா? உங்கள் தலைவர்கள் யார்தான் ஆகட்டும். உங்கçeக் காட்டி அதாவது நொண்டிப்பிள்çe நோய் கொண்ட பிள்çe, குருடு, குஸ்டம் உள்e பிள்çeயைக் கூட்டங்களில் காட்டி காசு சம்பாதித்துக் கொண்டு பிள்çeக்குப் பால் வாங்கிக் கூட ஊற்றாமல், புண்ணுக்கு மருந்து கூட போடாமல் மேலும் இçeக்கும்படி செய்து மற்றவர்களுக்குக் காட்டி உடனே பயன்படும்படி செய்து கொள்வது போல் உங்கçeப் பயன்படுத்திக் கொள்ளாமல் வேறு நன்மை என்ன செய்தார்கள்?
நான் சொல்வதைச் சிந்தியுங்கள். உங்களுக்குப் பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் உடனே தள்ளிவிடுங்கள். உங்கçeக் கொண்டு உங்கçeக் காட்டி பதவி பெறும் வயிறு வeர்க்கும் ஆட்கள் பேச்சைக் கேட்டு என் மீது கோபியாதீர்கள்.
பெரியார் ; 10.7.47 ‡ விடுதலை

தமிழிசை ஏன்?

தமிழன் தான் நுகரும் இசையை, தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்கçeப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூற வேண்டும்? என்று கேட்கிறேன். அதிலும், தமிழன் இப்படிக் கேட்பதை தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் தமிழ் மக்கள் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாட்டுக் கேட்பவன் தமிழில் பாட்டுப்பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.
தமிழரென்றும் தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்க¼e, தமிழில் பாட வேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் இவர்கள் உண்மையில் தமிழர் ‡ தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்யவர்களா, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யுபடியான மாதிரியில் வeரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும் இப்படிப்பட்ட இவர்கள் தங்கçeத் தமிழர்கயeன்று சொல்லிக் கொள்eக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப் போகும் என்றால் மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்கçe விட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அeவு கçe அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன். காது, கண் மனம் ஆகியவை எல்லா வி­யங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்று போல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த வி­யமாகும்.
தமிழில் பாடு என்றால் சிலர் அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபனை சொல்ல வந்ததாலேயே தமிழ் இசை இயக்கம் வகுப்பு துவே­த்தையும் உண்டுபண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வeர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.
இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிக்கைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகே தான் இது ஒரு இயக்கமாக விeங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்கçe நிர்ப்பந்தப்படுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும் போது பந்தோபஸ்துக்கு ஆண்கçeக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதாயும் ஏற்பட்டு விட்டது. பாட்டுப் பிழைப்புக்காரரான சிலர் மீது தமிழர்களுக்கு வெறுப்புக் கூட ஏற்படும்படியாக நேர்ந்து விட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்கçe விட்டு விலகினாலும் விலகிவிடலாம். அல்லது அவர்க¼e அதை விட்டு விலகினாலும் விலகி விட நேரிடலாம் என்று கூடக் கருதவேண்டியதுமாகிவிட்டது.
பொதுவாகச் சொன்னால், இந்த நிலையானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை தமிழன் அன்னிய மொழியைக் கற்க வேண்டும் என்று சொல்லுவது தேசாபிமானமும் நாட்டு முற்போக்குஇயல்கலை அபிவிருத்தியுமாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத புரியாத மொழியில், தமிழன் பாட்டுக் கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வeர்ச்சியாம்! மற்றும் தமிழனுக்குத் தமிழ் வேண்டும் தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும் கலைத் துரோகம் வகுப்புத் துவே­ம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம் பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும், எழுதுவது போல் தமிழனுக்குத் தமிழனல்லாதவன் தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் தேசாபிமானம் மொழியபிமானம் கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய் விட்டதேயாகும்.
தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வeர்ச்சியடைய வேண்டுமானால் தமிழன், காரியத்தில் தமிழனல்லாதவன் அவன் எப்படிப்பட்டவனாலும்" தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும்.
தந்தை பெரியார் ‡ "குடியரசு" 19‡02‡1944

பெரியார் தத்துவ மய்யம்

அமைகின்றனர் என்ற முடிவு ஏற்றுக்கொள்eத்தக்கதாக இல்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்வது ஒரு சமூகம் என்று சொல்வதற்குரிய அடிப்படை காரணிகçeயே தவறாக புரிந்துக்கொள்வதாகும். நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவன் தன் சமூகத்தில் உறுப்பாக இருக்ககூடாதவனாகி விடுவதும் இல்லை; மனிதர் பலர் நெருங்கி வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகத்தினர் என்றாகி விடவும் மாட்டார்கள்.
இரண்டாவதாக, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்ததன்மை மட்டுமே மனிதர்கçe ஒரு சமூகமாக ஒன்றிணைக்க போதுமானதல்ல. ஒரு சில அம்சங்களில் காணப்படும் ஒற்றுமை ஒன்றினால் மட்டுமே சமூகம் ஒன்று உருவாக போதுமானதாகாது. மக்கள் தங்களுக்குள் பொதுமை தன்மைகçe கொண்டிருக்கும்போது தான் ஒரு சமூகமாக உருக்கொள்கின்றனர். மக்கள் ஒத்ததன்மையை பெற்றிருப்பது என்பதும் தமக்குள் பொதுவானவற்றைப் பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையது ஆகும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றை பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது. ஒருவர், பிறருடைய செயல்பாடுக¼ளாடு ஒத்த முறையில் செயல்பட்டால் மட்டும் போதாது. அவை ஒத்த தன்மையனவாக இருந்தாலும், இணையான செயல்கள் மக்கçeச் சமூகமாக ஒன்றிணைக்காது. பலவகை ஜாதிகçeச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டு. திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு ஜாதியினர் ஒன்று கலவாமல் கொண்டாடுவதால் ஜாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணையவேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் , பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல் படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன.கூட்டு நடவடிக்கை களில் தனிமனிதன் பங்குபெறவும்,பகிர்ந்து கொள்eவும் நேரும் போதுதான் அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்கçe ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்குகின்றது. ஜாதி முறையோ, இவ்வாறு கூடிச் செயலாற்றுவதை தடுப்பதால் ஜாதி முறை, இந்துக்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, உணர்வு கலந்த ஒரு சமூகமாக உருவாவதை தடுக்கின்றது.‡ ( டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 1 பக்கம் ‡ 72,73 )