Monday, August 18, 2008

தமிழிசை ஏன்?

தமிழன் தான் நுகரும் இசையை, தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்கçeப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூற வேண்டும்? என்று கேட்கிறேன். அதிலும், தமிழன் இப்படிக் கேட்பதை தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் தமிழ் மக்கள் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாட்டுக் கேட்பவன் தமிழில் பாட்டுப்பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.
தமிழரென்றும் தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்க¼e, தமிழில் பாட வேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் இவர்கள் உண்மையில் தமிழர் ‡ தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்யவர்களா, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யுபடியான மாதிரியில் வeரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும் இப்படிப்பட்ட இவர்கள் தங்கçeத் தமிழர்கயeன்று சொல்லிக் கொள்eக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப் போகும் என்றால் மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்கçe விட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அeவு கçe அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன். காது, கண் மனம் ஆகியவை எல்லா வி­யங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்று போல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த வி­யமாகும்.
தமிழில் பாடு என்றால் சிலர் அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபனை சொல்ல வந்ததாலேயே தமிழ் இசை இயக்கம் வகுப்பு துவே­த்தையும் உண்டுபண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வeர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.
இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிக்கைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகே தான் இது ஒரு இயக்கமாக விeங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்கçe நிர்ப்பந்தப்படுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும் போது பந்தோபஸ்துக்கு ஆண்கçeக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதாயும் ஏற்பட்டு விட்டது. பாட்டுப் பிழைப்புக்காரரான சிலர் மீது தமிழர்களுக்கு வெறுப்புக் கூட ஏற்படும்படியாக நேர்ந்து விட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்கçe விட்டு விலகினாலும் விலகிவிடலாம். அல்லது அவர்க¼e அதை விட்டு விலகினாலும் விலகி விட நேரிடலாம் என்று கூடக் கருதவேண்டியதுமாகிவிட்டது.
பொதுவாகச் சொன்னால், இந்த நிலையானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை தமிழன் அன்னிய மொழியைக் கற்க வேண்டும் என்று சொல்லுவது தேசாபிமானமும் நாட்டு முற்போக்குஇயல்கலை அபிவிருத்தியுமாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத புரியாத மொழியில், தமிழன் பாட்டுக் கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வeர்ச்சியாம்! மற்றும் தமிழனுக்குத் தமிழ் வேண்டும் தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும் கலைத் துரோகம் வகுப்புத் துவே­ம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம் பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும், எழுதுவது போல் தமிழனுக்குத் தமிழனல்லாதவன் தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் தேசாபிமானம் மொழியபிமானம் கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய் விட்டதேயாகும்.
தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வeர்ச்சியடைய வேண்டுமானால் தமிழன், காரியத்தில் தமிழனல்லாதவன் அவன் எப்படிப்பட்டவனாலும்" தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும்.
தந்தை பெரியார் ‡ "குடியரசு" 19‡02‡1944

No comments: