Monday, August 18, 2008

இனம் என்பது வாழ்வு ‡ சாதி என்பது இழிவு

கூலி உயர்வுக்கோ, உத்தியோக பங்குக்கோ, நாட்டு சுதந்திரத்திற்கோ, பொது உடைமைக்கோ, அல்லது வேறு எந்தக் காரியத்துக்கு ஆகக் கூடியிருந்தாலும் சரி, நீங்கள் உங்கçeப் பற்றிய ஒரு உண்மையை மாத்திரம் மறந்து விடாதீர்கள்.
அதாவது நீங்கள் கீழ்ஜாதி என்றும், பஞ்சமர் (றீளீ & றீவீ) என்றும் இழி மக்கள் என்றும் ஹரிஜனங்கள் என்றும் இழிவாகக் கருதப்பட்டு அழைக்கப்பட்டு வருவது மாத்திரமல்லாமல், அந்தப்படி மதம், அரசியல் ஆதாரங்களும் அதாவது சாஸ்திரம் சமயம் முதலியவைகளில் ஸ்திரப்படுத்தியும் நடவடிக்கைகளில் இழிமக்களாக நீங்கள் பெரும்பாலோர் நடத்துப்பட்டு வருவதோடு அதன் பயனாக நீங்கள் மற்ற மக்கçeக் காட்டிலும் சமுதாயம் கல்வி, பொருளாதாரம், வாழ்வு முதலியவைகளில் கடையராய் கீழ்த்தரமுள்eவர்களாய் இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த இழிநிலை, கடை நிலை, தடை நிலை நீங்க, நீங்க வைக்க இன்று உங்கள் வசமோ, அல்லது வேறு உங்களுக்காகப் பாடுபடுகின்ற வேறு யார் வசமோ, எவ்வித சாதனமும் திட்டமும் முயற்சியும் இல்லை.
இன்று மாத்திரம் அல்லாமல் பஞ்சமன் (றீளீ & றீவீ) சண்டாeன் இழி மகன், கடையன் என்கின்ற மக்கள் பிறவியினால் என்று உண்டாக்கப்பட்டார்க¼ளா, அன்று முதல் உங்கள் இழிவு நீங்க வழி யாரிடமும் எந்தக் கடவுளிடமும் எந்த கடவுள் பக்தர், ஆழ்வார், நாயன்மார், மாகத்மாரி´ என்பவர்களிடம் எந்த அவதாரத்திற்கும் எந்த ஜனநாயக ஆட்சி ராமராஜ்ய சாம்ராஜ்யத்தினிடமும் இல்லை. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு இதற்குப் பரிகாரம் தேட கொள்கை, திட்டம் வகுங்கள்.
அதை விட்டுவிட்டு சர்க்காரிடம் உத்தியோகம், படிப்பு, கடமை, கூரை, குடிசை மிராசுதானிடம் 2 படி நெல் உயர்வு என்பதெல்லாதம் அதற்கு யாதொரு பலனும் அளிக்காது என்பததோடு உங்களுக்கு இந்த உத்தியோகம் முதல் கூலி வரை சம்பாதித்துக் கொடுக்கிறேன் என்கின்ற தரகர்களுக்கும் ஏதோ ஒன்று இரண்டு வாயாடி தந்திரக்காரர்கள் இரண்டு கோனை எழுத்தும், எழுதும் ஆங்கிலம் படித்தவனுக்கு உத்தியோக எலும்பும் அல்லாமல் வேறு பயன் ஏதும் விçeயப் போவதில்லை.
நீங்கள் ஏன் பஞ்சமன், எப்படிப் பஞ்சமன் என்பது தெரிந்தால் தான் நீங்கள் மனிதர்களாக வாழ. மற்ற மனிதர்களுக்கு நீங்கள் உரிமை கொடுக்கக் கூடியவர்களாக வாழ முடியும். அதில்லாமல். நீங்கள் 4‡வது ஜாதி, 5‡வது ஜாதி, மற்ற ஒருவர் முதலாவது ஜாதி, இரண்டாவது ஜாதி என்பது சட்டத்தில் சாஸ்திரத்தில் சாமிகளிடத்தில் இருக்கும் வரையில் பிச்சை கேட்கத்தான் முடியும்.
ஆகவே அந்த உண்மை உங்களுக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்களின் அனேகம் பேர் அதாவது 100‡க்கு 95 பேர்களுக்கு வீடு இல்லை. 100‡க்கு 99 பேர்களுக்கு உத்தியோகம் உடலுழைப்பும் இல்லாத கஷ்டமும் இழிவுமான வேலை இல்லாத வேலை இல்லை.
நீங்கள் அநேகர் வாழ்வுக்காக இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி இருக்கிறீர்கள். சாக்கடை தள்ளுவது, கக்கூஸ் எடுப்பது, பிணம் சுடுவது, சுடுகாடு காப்பது முதலிய ஈன வேகை என்பவைகçeயயல்லாம் செய்வதில் உள்e 100 பேரும் நீங்க¼e.
இந்தப்படி ஏன் இருக்க வேண்டும்? உங்கçeத் தவிர வேறு எந்த ஜாதியானவது அதாவது முதல் ஜாதி பிராமணனாவது அவனுக்கு அடுத்தவனாக இரண்டாவது ஜாதி சைவனாவது இந்த இழிவேலை செய்கிறானா? படிப்புக்குத் தொங்குகிறானோ? ஜீவனத்துக்குக் கக்கூஸ் எடுக்க மூட்டை தூக்க வேறு நாட்டுக்கு ஓடுகிறானா?
இந்த அடிப்படையினை அறிந்து அதற்கு மருந்து தேடாமல் தற்கால சாந்திக்குக் கூட பயன்படாத மந்திரி, செகரட்டரி உத்யோகம் படிப்பு, இரண்டு படி கூலி நெல் உயர்வு என்று திரிகிறீர்க¼e! இது அறிவுள்e காரியமாகுமா? மானமுள்e காரியமாகுமா? உங்கள் தலைவர்கள் யார்தான் ஆகட்டும். உங்கçeக் காட்டி அதாவது நொண்டிப்பிள்çe நோய் கொண்ட பிள்çe, குருடு, குஸ்டம் உள்e பிள்çeயைக் கூட்டங்களில் காட்டி காசு சம்பாதித்துக் கொண்டு பிள்çeக்குப் பால் வாங்கிக் கூட ஊற்றாமல், புண்ணுக்கு மருந்து கூட போடாமல் மேலும் இçeக்கும்படி செய்து மற்றவர்களுக்குக் காட்டி உடனே பயன்படும்படி செய்து கொள்வது போல் உங்கçeப் பயன்படுத்திக் கொள்ளாமல் வேறு நன்மை என்ன செய்தார்கள்?
நான் சொல்வதைச் சிந்தியுங்கள். உங்களுக்குப் பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் உடனே தள்ளிவிடுங்கள். உங்கçeக் கொண்டு உங்கçeக் காட்டி பதவி பெறும் வயிறு வeர்க்கும் ஆட்கள் பேச்சைக் கேட்டு என் மீது கோபியாதீர்கள்.
பெரியார் ; 10.7.47 ‡ விடுதலை

No comments: