Monday, August 18, 2008

பெரியார் தத்துவ மய்யம்

அமைகின்றனர் என்ற முடிவு ஏற்றுக்கொள்eத்தக்கதாக இல்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்வது ஒரு சமூகம் என்று சொல்வதற்குரிய அடிப்படை காரணிகçeயே தவறாக புரிந்துக்கொள்வதாகும். நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவன் தன் சமூகத்தில் உறுப்பாக இருக்ககூடாதவனாகி விடுவதும் இல்லை; மனிதர் பலர் நெருங்கி வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகத்தினர் என்றாகி விடவும் மாட்டார்கள்.
இரண்டாவதாக, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்ததன்மை மட்டுமே மனிதர்கçe ஒரு சமூகமாக ஒன்றிணைக்க போதுமானதல்ல. ஒரு சில அம்சங்களில் காணப்படும் ஒற்றுமை ஒன்றினால் மட்டுமே சமூகம் ஒன்று உருவாக போதுமானதாகாது. மக்கள் தங்களுக்குள் பொதுமை தன்மைகçe கொண்டிருக்கும்போது தான் ஒரு சமூகமாக உருக்கொள்கின்றனர். மக்கள் ஒத்ததன்மையை பெற்றிருப்பது என்பதும் தமக்குள் பொதுவானவற்றைப் பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையது ஆகும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றை பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது. ஒருவர், பிறருடைய செயல்பாடுக¼ளாடு ஒத்த முறையில் செயல்பட்டால் மட்டும் போதாது. அவை ஒத்த தன்மையனவாக இருந்தாலும், இணையான செயல்கள் மக்கçeச் சமூகமாக ஒன்றிணைக்காது. பலவகை ஜாதிகçeச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டு. திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு ஜாதியினர் ஒன்று கலவாமல் கொண்டாடுவதால் ஜாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணையவேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் , பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல் படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன.கூட்டு நடவடிக்கை களில் தனிமனிதன் பங்குபெறவும்,பகிர்ந்து கொள்eவும் நேரும் போதுதான் அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்கçe ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்குகின்றது. ஜாதி முறையோ, இவ்வாறு கூடிச் செயலாற்றுவதை தடுப்பதால் ஜாதி முறை, இந்துக்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, உணர்வு கலந்த ஒரு சமூகமாக உருவாவதை தடுக்கின்றது.‡ ( டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 1 பக்கம் ‡ 72,73 )

No comments: