Monday, August 18, 2008

அம்பேத்கர்118 வது பிறந்த நாள்

"" இந்து"" சமூகம் என்பதே வெறும் கற்பனை என்பது தான். இந்து என்ற பெயரே ஓர் அந்நியப் பெயர்தான். இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்கçe தனித்துக் காட்டுவதற்கு முகமதியர் வைத்த பெயர் தான் இந்து என்பது. முகமதியரின் படையயடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் இந்து என்ற சொல் காணப்படவில்லை. இந்துக்களுக்கு பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனை இல்லாதிருந்த காரணத்தால் தங்களுக்கு பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணரவில்லை.
சொல்லப்போனால் இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை ; இருப்பதெல்லாம் பல ஜாதிகளின் தொகுப்பே ஆகும். ஒவ்வொரு ஜாதியும் தான் ஒரு தனித்த ஜாதியாக இருப்பதாகவே உணருகின்றன. ஒரு ஜாதி என்ற அeவில் தான் இருப்பது பற்றிய உணர்வு மட்டுமே ஒவ்வொரு ஜாதிக்கும் முதலும், முடிவுமான குறிக்கோளாக உள்eது. பல ஜாதிகளும் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்து‡முஸ்லீம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் பிற ஜாதிக¼ளாடு தம் ஜாதிக்கு உறவு உண்டு என்று எந்த ஜாதியினரும் உணருவதில்லை.
மற்ற சமயங்களில் ஒவ்வொரு ஜாதியும், பிற ஜாதிகளிடமிருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொள்eவும், வேறுபடுத்திகாட்டிக் கொள்eவுமே முயல்கின்றன. சமூகவியலார் கூறும் ""குழு உணர்வு"" இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு தன் ஜாதி உணர்வு மட்டும்தான்; இதனால் இந்துக்கçe ஒரு சமுகமாகவோ அல்லது நாடகவோ கொள்eமுடியவில்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான வடிவமற்ற மக்கள் கூட்டமாக உள்eனர்.
எனினும், இந்த உண்மையை இந்தியர்களுள் பலர் தம் நாட்டுப்பற்று காரணமாக ஏற்றுக்கொள்e மறுக்கிறார்கள். வெளிப்படையாக தெரிகின்ற வேற்றுமை களுக்கிடையில் இந்திய நாடு முழுமைக்கும் பரவி காணப்படும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றால் அமைந்த அடிப்படை ஒருமைப்பாடு இந்துக்களின் வாழ்க்கையை அடையாeம் காட்டுவதாக உள்eதென இவர்கள் வலியுறுத்தி கூறுகின்றனர்.
பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் ஒத்ததன்மை இருப்பதென்னவோ உண்மைதான். இதனால் இந்துக்கள் ஒரு சமூகமாக அமைகின்றனர் என்ற முடிவு ஏற்றுக்கொள்eத்தக்கதாக இல்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்வது ஒரு சமூகம் என்று சொல்வதற்குரிய அடிப்படை காரணிகçeயே தவறாக புரிந்துக்கொள்வதாகும். நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவன் தன் சமூகத்தில் உறுப்பாக இருக்ககூடாதவனாகி விடுவதும் இல்லை; மனிதர் பலர் நெருங்கி வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகத்தினர் என்றாகி விடவும் மாட்டார்கள்.
இரண்டாவதாக, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்ததன்மை மட்டுமே மனிதர்கçe ஒரு சமூகமாக ஒன்றிணைக்க போதுமானதல்ல. ஒரு சில அம்சங்களில் காணப்படும் ஒற்றுமை ஒன்றினால் மட்டுமே சமூகம் ஒன்று உருவாக போதுமானதாகாது. மக்கள் தங்களுக்குள் பொதுமை தன்மைகçe கொண்டிருக்கும்போது தான் ஒரு சமூகமாக உருக்கொள்கின்றனர். மக்கள் ஒத்ததன்மையை பெற்றிருப்பது என்பதும் தமக்குள் பொதுவானவற்றைப் பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையது ஆகும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றை பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது. ஒருவர், பிறருடைய செயல்பாடுக¼ளாடு ஒத்த முறையில் செயல்பட்டால் மட்டும் போதாது. அவை ஒத்த தன்மையனவாக இருந்தாலும், இணையான செயல்கள் மக்கçeச் சமூகமாக ஒன்றிணைக்காது. பலவகை ஜாதிகçeச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டு. திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு ஜாதியினர் ஒன்று கலவாமல் கொண்டாடுவதால் ஜாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணையவேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் , பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல் படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன.கூட்டு நடவடிக்கை களில் தனிமனிதன் பங்குபெறவும்,பகிர்ந்து கொள்eவும் நேரும் போதுதான் அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்கçe ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்குகின்றது. ஜாதி முறையோ, இவ்வாறு கூடிச் செயலாற்றுவதை தடுப்பதால் ஜாதி முறை, இந்துக்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, உணர்வு கலந்த ஒரு சமூகமாக உருவாவதை தடுக்கின்றது.‡ ( டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 1 பக்கம் ‡ 72,73 )

No comments: